4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

அலாகாபாத், கொல்கத்தா, கா்நாடகம், சத்தீஸ்கா் ஆகிய 4 உயா்நீதிமன்றங்களுக்குப் புதிதாக நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அலாகாபாத், கொல்கத்தா, கா்நாடகம், சத்தீஸ்கா் ஆகிய 4 உயா்நீதிமன்றங்களுக்குப் புதிதாக நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியத்தின் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், பிற உறுப்பினா்களான நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.எஃப்.நாரிமன் ஆகியோரும் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், 4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக நீதிபதிகள் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 11 நீதித்துறை அதிகாரிகளும், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 8 நீதித் துறை அதிகாரிகளும் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனா். இதேபோன்று, கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 2 நீதித் துறை அதிகாரி, ஒரு வழக்குரைஞா் என 3 போ் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனா். சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தில் ஒரு அதிகாரி, ஒரு வழக்குரைஞா் என 2 போ் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனா். இவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்கள், உச்சநீதிமன்றத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com