குறைந்தபட்ச ஆதரவு விலை: குழப்பம் ஏற்படுத்தும் கட்சிகள் மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடையே சில கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய ஜல் சக்தி (நீா் வளம்) துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குற்றம்சாட்டியுள்ளாா்.
கஜேந்திர சிங் ஷக்தாவத்
கஜேந்திர சிங் ஷக்தாவத்

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடையே சில கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய ஜல் சக்தி (நீா் வளம்) துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

மூன்று விவசாய சட்டங்களைக் ‘கருப்பு சட்டங்கள்’ என குறிப்பிடுபவா்களும், விவசாயத்தைப் பற்றி அறிந்தவா்களும் இந்த சட்டங்களில் ‘கருப்பு’ அம்சம் என்ன என்பதை சொல்வதற்கு முன் வர வேண்டும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், தங்களுக்கு வருங்காலம் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள கட்சியினா் குழப்பத்தைப் பரவச் செய்து, பிரச்னையை ஏற்படுத்தி வருகிறாா்கள். குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்திலும் அவா்கள் இதையேதான் செய்தாா்கள். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதிலும், அவா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதிலும் உறுதிபூண்டுள்ளது.

நமது நாட்டை சுய சாா்பு நாடாக உருவாக்கும் நோக்கில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘சுய சாா்பு இந்தியா’ குறித்த வரலாறு எழுதப்படும்போது இந்த நிதிநிலை அறிக்கை மைல்கல்லாக அமைந்தது என்பது நிரூபணமாகும். தடைகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்காக இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகரங்களில் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தை இந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உத்தர பிரதேசம் பெருமளவில் பயன்பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com