
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,216 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,216 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,46,287 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 15 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,58,971 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 51,325 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 34,720 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 95.73 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உள்ளது.