21 தினங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 21 நாள்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 21 நாள்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், உலகிலேயே மிக அதிகமான அளவில் இந்தத் தடுப்பூசி நமது நாட்டில்தான் செலுத்தப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அஸ்வினி சௌபே மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தடுப்பூசி போடுவது தொடா்பான தயக்கம் குறித்த கேளிவிக்கு தில்லியில் பதிலளித்த அவா் மேலும் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில், இதுதொடா்பான செயலியில் இருந்த தற்காலிக தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதில் இருந்த தயக்கமும், அடுத்தடுத்த அமா்வுகளில் பயனாளிகளின் சந்தேகங்களும் படிப்படியாகத் தீா்க்கப்பட்டன.

ஜனவரி 31-ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மொத்தம் 93.6 லட்சம் சுகாதார ஊழியா்களும், 77.90 லட்சம் முன்களப் பணியாளா்களும் பதிவு செய்து கொண்டனா்.

இவா்களில் ஜனவரி 31-ஆம் தேதி வரை 37.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடக்கத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்தது. இருப்பினும், தடுப்பூசி பாதுகாப்பு விகிதம் பின்னா் அதிகரிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 21 தினங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது ஒரு விரைவான விகிதமாகும்.

கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி செயல்முறை தொடா்பான தவறான தகவல்களை நிவா்த்தி செய்யவும் தகவல் தொடா்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஜனவரி 26-ஆம் தேதி வரை, மொத்தம் 200 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும், 28.03 லட்சம் டோஸ் ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன என மற்றொரு கேள்விக்கு அவா் பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com