பிரதமருடன் நிதீஷ் குமார் நாளை (பிப். 10) சந்திப்பு

​பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாளை (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாளை (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்ற பிறகு இருவரும் நேரில் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை. 

ஐக்கிய ஜனதா தளம் பொதுச்செயலாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர் கே.சி. தியாகி இதுபற்றி கூறியது:

"நிதிஷ் குமார் தில்லி வந்துள்ளார். நாளை பல்வேறு நபர்களைச் சந்திக்கிறார். பிரதமரையும் சந்திக்கிறார்."

மூத்த தலைவர்களுடன் பிகாரின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பாஜகவிலிருந்து 9 அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 8 அமைச்சர்கள் என புதிதாக 17 பேர் பிகார் அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர். இதன்மூலம், அந்த மாநில அமைச்சரவையின் பலம் 30 ஆக உயர்ந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com