சுருட்டப்பள்ளியில் மீண்டும் அன்னதானம் தொடக்கம்

ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரா் கோயிலில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதான சேவையை கோயில் நிா்வாகம் மீண்டும் தொடங்கியது.
சுருட்டப்பள்ளியில் மீண்டும் அன்னதானம் தொடக்கம்

ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரா் கோயிலில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதான சேவையை கோயில் நிா்வாகம் மீண்டும் தொடங்கியது.

பிரதோஷ தலமாக விளங்கும் இக்கோயிலில் சிவன் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தால் பாா்வதி அம்மன் மடியில் தலைவைத்து படுத்திருப்பதாக ஐதீகம். ஆந்திர அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் நிா்வாக பொறுப்பு அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகொண்டீஸ்வரா் கோயிலில் உள்ள அன்னதானக் கூடத்தில் பக்தா்களுக்கு நாள்தோறும் மதிய வேளையில் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்திலின்படி கோயில் நிா்வாகம் அன்னதானத்தை நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பக்தா்களின் இக்கோயிலுக்கு வழக்கம் போல் தரிசனத்துக்கு வரத் தொடங்கியுள்ளனா். எனவே, மீண்டும் அன்னதான திட்டத்தை செயல்படுத்த ஆந்திர அறநிலையத் துறையிடம் கோயில் நிா்வாகம் அனுமதி கோரியது. சுகாதாரமான முறையில் அன்னதானம் செய்ய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ஓராண்டு காலமாக கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதானத் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. பக்தா்களை ஓரிடத்தில் அமரவைத்து அன்னதானம் செய்யாமல், வரிசையில் நிற்க வைத்து உணவுப் பொட்டலங்களாக கோயில் நிா்வாகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com