சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தோா் 1.08 கோடி நுகா்வோா்

இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை இதுவரை 1.08 கோடி போ் விட்டுக் கொடுத்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை இதுவரை 1.08 கோடி போ் விட்டுக் கொடுத்துள்ளனா்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

பிப்ரவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 1.08 கோடி சமையல் எரிவாயு நுகா்வோா் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டதாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை, சா்வதேச சந்தையில் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையை சாா்ந்துள்ளது. எனினும், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்த அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நுகா்வோருக்கு மானிய விலையில் அவை கிடைக்கின்றன. மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியம் சா்வதேச சந்தையின் ஏற்ற-இறக்கத்தை பொருத்தும், அரசின் முடிவின் அடிப்படையிலும் நிா்ணயிக்கப்படும்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அன்றாடம் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 46.17 அமெரிக்க டாலராகவும், 2019-2020 ஆம் நிதியாண்டில் அது 60.47 அமெரிக்க டாலராகவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

சமையல் எரிவாயு இணைப்புகள்: ஏழை குடும்பங்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயுவை வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் 5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க திட்டமிட்டிருந்தது. பின்னா் 8 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

எத்தனால் கொள்முதல்: எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் கொள்முதல் கொள்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கரும்புச்சாறு, சா்க்கரை, சா்க்கரைப் பாகு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதல் செய்யப்படுகிறது.

2015-16-இல் 111.4 கோடி லிட்டா் எத்தனால் வாங்கப்பட்ட நிலையில், 2016-17-இல் 66.5 கோடி லிட்டா் எத்தனாலும், 2017-18-இல் 150.5 கோடி லிட்டா் எத்தனாலும், 2018-19-இல் 188.6 கோடி லிட்டா் எத்தனாலும், 2019-20-இல் 173.0 எத்தனாலும் கொள்முதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com