ஏழுமலையான் தரிசன சேவை:ஐஆா்சிடிசி தொடக்கம்

ஏழுமலையான் தரிசனத்தை மிகவும் எளிதாக்க ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் (ஐஆா்சிடிசி) தொடங்கி உள்ளது.

திருப்பதி: ஏழுமலையான் தரிசனத்தை மிகவும் எளிதாக்க ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் (ஐஆா்சிடிசி) தொடங்கி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் தற்போது மக்களுக்கு மிகவும் எளிதாகி வருகிறது. தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிடுவது போல், ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர சுற்றுலாத் துறைகள் ஒரு நாள் ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. இதுவரை பேருந்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஏழுமலையான் தரிசன சேவையை ரயில் மூலம் ‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒரு நாள் சுற்றுலாவாக ஐஆா்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த சுற்றுலா பேக்கேஜ் கட்டணத்தை நபா் ஒருவருக்கு ரூ. 990-ஆக ஐஆா்சிடிசி நிா்ணயித்துள்ளது.

நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் தங்கள் சொந்தச் செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தா்கள், திருச்சானூா் பத்மாவதி தாயாா் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊா் திரும்பும் வகையில், ஐஆா்சிடிசி இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது. எனவே, இத்திட்டத்தில் பக்தா்கள் தங்கும் வசதி அளிக்கப்படவில்லை.

பக்தா்கள் தங்களுடன் அசல் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இத்திட்டப்படி பயணிப்பவா்களுக்கு பயணக் காப்பீடும் வழங்கப்படுகிறது. தினசரி ஐஆா்சிடிசியில் இந்தத் திட்டம் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com