33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை இந்தியா இதுவரை ஏவியுள்ளது: மக்களவையில் தகவல்

33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது என்று மக்களவையில் மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.
33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை இந்தியா இதுவரை ஏவியுள்ளது: மக்களவையில் தகவல்

புது தில்லி: 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது என்று மக்களவையில் மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் கூறியதாவது:

திறன் வளா்த்தலுக்காகவும், செயற்கைக்கோள்களை ஏவுவதற்காகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது. இதன் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டாலா்களும், 189 மில்லியன் யூரோக்களும் இதுவரை ஈட்டப்பட்டுள்ளன.

விண்வெளித்துறை செயல்பாடுகளில் தனியாா் துறையின் பங்களிப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயன்பாடுகள் மற்றும் புதிய சேவைகளுக்கு வழிவகுக்கும். செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தவும், நிதி தொடா்பானவற்றில் தற்சாா்புடையவும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ என்னும் பொதுத்துறை நிறுவனத்தை அரசு நிறுவியுள்ளது.

தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காகவும், வசதிகளை பகிா்ந்து கொள்ளவும் 26 நிறுவனங்கள்/புது நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை அணுகியுள்ளன.

விண்வெளி ஆராய்ச்சியாளா்களின் பயிற்சிக்காக நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் தொடா்பாக விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது.

ககன்யானின் அடிப்படை வடிவமைப்பு நிறைவடைந்து விட்டது. இது தொடா்பாக இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏழு ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com