மும்பை: ரயில் போக்குவரத்துக்கும் கரோனா அதிகரிப்புக்கும் தொடர்பா?

நாடு முழுவதும் பெரும்பாலும் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், திடீரென மும்பையில் ஒரு சில நாள்களாக புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மும்பை: ரயில் போக்குவரத்துக்கும் கரோனா அதிகரிப்புக்கும் தொடர்பா?
மும்பை: ரயில் போக்குவரத்துக்கும் கரோனா அதிகரிப்புக்கும் தொடர்பா?


மும்பை: நாடு முழுவதும் பெரும்பாலும் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், திடீரென மும்பையில் ஒரு சில நாள்களாக புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் மும்பையில் பயணிகள் ரயில் சேவை தொடங்கி, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கும், கரோனா தொற்று அதிகரிப்பதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாமா என்று சுகாதாரத் துறையினரும், பொதுமக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

கடந்த புதன்கிழமை மும்பை பெருமாநகராட்சியில் புதிதாக 1,075 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த செவ்வாயன்று வெறும் 693 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இது 55 சதவீதம் அதிகமாகும். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மும்பையில் ஒரு மாதத்துக்கும் மேலாக 500 என்ற அளவிலேயே கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது முதல் முறையாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளையில் மும்பையில் மட்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் 400- 450 கரோனா நோயாளிகள் பதிவான நிலையில் இது புதன்கிழமை 558 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கும், பயணிகள் ரயில் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, தற்போது நாள்தோறும் மேற்கொள்ளும் கரோனா பரிசோதனையை அதிகரித்திருக்கிறோம், அதன் காரணமாக அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25.52 லட்சத்தைக் கடந்து விட்ட நிலையில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உள்ளது. இவர்களில் மும்பை பெருமாநகராட்சியில் மட்டும் 12 ஆயிரம் பேர் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com