மேற்கு வங்கம்: 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று (பிப்.12) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளித்து, வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வகுப்பறைக்குள் அனுப்பப்பட்டனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பின்னர் கரோனா பரவும் விகிதம் குறைந்து வருவதற்கேற்ப மத்திய அரசு அளித்த தளர்வுகளின்படி அந்தந்த மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வருகின்றன.

அந்தவகையில் மேற்கு வங்கத்தில் இன்று (பிப்.12) முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளித்து, வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வகுப்பறைக்குள் அனுப்பப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com