கரோனா: இந்தியாவில் புதிதாக 12,143 பேர் பாதிப்பு; 103 பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,143 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 92 ஆயிரத்து 746-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா: இந்தியாவில் புதிதாக 12,143 பேர் பாதிப்பு; 103 பேர் பலி


புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,143 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 92 ஆயிரத்து 746-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கரோனாவால் புதிதாக 12,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 103 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 550-ஆக அதிகரித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனாவில் இருந்து 97.32 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது. தற்போது, கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,36, 571 ஆக உள்ளது.
இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 மாநிலங்களில் கரோனாவுக்கு ஒருவர் கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 79,67,647 -ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com