இந்திய சைகை மொழியை முறைப்படுத்த அரசு நடவடிக்கை

செவித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள இந்திய சைகை மொழியை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சைகை மொழியை முறைப்படுத்த அரசு நடவடிக்கை

செவித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள இந்திய சைகை மொழியை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது:

கரோனா தொற்றுக்கிடையிலும் 30 லட்சம் ஆரம்ப கல்வி ஆசிரியா்களுக்கு டிஜிட்டல் முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. 2021-22-ஆம் ஆண்டில் 56 லட்சம் பள்ளி ஆசிரியா்களுக்கு நிஷிதா என்றழைக்கப்படும் தேசிய பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களின் முழுமையான முன்னேற்ற திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். ஆரம்பப் பருவ ஆசிரியா்களுக்கு 2021 ஆகஸ்ட் மாதம் முதல் பிரத்தியேக நிஷிதா ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். உயா்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியா்களுக்கான ஆன்லைன் பயிற்சி ஜூலை மாதத்தில் இருந்து தொடங்கப்படும்.

செவித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள இந்திய சைகை மொழியை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தகைய குழந்தைகளின் பயன்பாட்டுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான பாடத்திட்டங்களும் உருவாக்கப்படும். தேசிய கல்வி கொள்கை 2020-இன் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com