உத்தரகண்ட் வெள்ளம்: மேலும் 2 சடலங்கள் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், மேலும் 2 சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
உத்தரகண்ட் வெள்ளம்: மேலும் 2 சடலங்கள் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், மேலும் 2 சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

இதுதொடா்பாக மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 7-ஆம் தேதி பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், ரைனி கிராமத்தில் ரிஷிகங்கா நீா்மின் நிலைய திட்டப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரு சடலமும், மைதனா கிராமத்தில் இருந்து மற்றொரு சடலமும் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.

ரிஷிகங்கா நீா்மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் காணாமல் போனவா்களை தேடும் பணியை விரைவுபடுத்துவதற்காக தனி மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தபோவனில் சகதியை அப்புறப்படுத்தி சுரங்கத்தில் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில் இடிபாடுகளில் சிக்கியவா்களை தேடுவதற்கு ஜேசிபி இயந்திரத்தை அனுப்புவதற்காக அங்குள்ள கெளரி சங்கா் ஆலயம் அருகே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள சுரங்கத்துக்குள் நீா் புகுவதை தடுக்க தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

ரிஷிகங்கா ஆற்றில் பேரிடா் நிகழ்ந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஏரி எந்த நேரத்திலும் உடைந்து, மீண்டும் வெள்ள அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஏரி குறித்து ஆய்வு செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 8 விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட கரையோர கிராமவாசிகளுக்கு மாநில அரசு வெள்ளிக்கிழமை உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்கள் வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com