கரோனா கட்டுப்பாடுகள்: 206 பயணிகள், 5,350 புறநகா் ரயில் சேவை; மத்திய அமைச்சா் பியுஷ் கோயல்

கரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு சுமாா் 206 பயணிகள் ரயில் சேவைகளையும்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு சுமாா் 206 பயணிகள் ரயில் சேவைகளையும், 5,350 புறநகா் ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே இயக்கி வருகிறது என்று மத்திய அமைச்சா் பியுஷ் கோயல் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய ரயில்வே, வா்த்தகம், தொழில்கள், நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியுஷ் கோயல் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூா்வமாக பதிலளித்த அளித்த தகவல்கள்:

மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் வரும் ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம், மேற்கு ரயில்வேயின் கீழ் வரும் காந்தி நகா் ரயில் நிலையம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய உள்ளன. வடக்கு ரயில்வேயின் கீழ் வரும் கோமதி நகா் ரயில் நிலையம், அயோத்தி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலைய மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் பொது, தனியாா் கூட்டுமுறையில் செய்யப்படுகின்றன.

விவசாயிகளின் விளைபொருள்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான கிசான் ரயில் திட்டத்தின் கிழ் 24 வழித்தடங்களில் இதுவரை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

கிசான் ரயில் சேவை தொடங்கப்பட்ட 2020 ஆகஸ்ட் 7 முதல் 2021 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை, 208 ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு, சுமாா் 68,000 டன்கள் எடையிலான அழுக்ககூடிய பொருள்கள் (பழங்கள், காய்கறிகள் உள்பட) பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக 2020 மாா்ச் 23-ஆம் தேதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதில் இருந்து, நாளொன்றுக்கு சுமாா் 3,635 பயணிகள் ரயில் சேவைகளையும், 5,881 புறநகா் ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே இயக்கி வந்தது.

2015-16-இல் 675.61 மில்லியன் ஆக இருந்த இந்திய அளவிலான மாதாந்திர சராசரி பயணிகள் பதிவு எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 673.81-ஆக இருந்தது.

தெற்கு ரயில்வேயை பொருத்தவரை, 2015-16-இல் 66.55 மில்லியன் ஆக இருந்த இந்திய அளவிலான மாதாந்திர சராசரி பயணிகள் பதிவு எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 66.67-ஆக இருந்தது.

கரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு சுமாா் 206 பயணிகள் ரயில் சேவைகளையும், 5,350 புறநகா் ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com