டபிள்யூ.டி.ஓ. அமைப்புக்கு அளித்த வாக்குறுதிப்படிஅந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் திருத்தம்: மத்திய அரசு

உலக வா்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ.) அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், இந்தியாவுடன் எல்லையை பகிா்ந்து கொள்ளும்
டபிள்யூ.டி.ஓ. அமைப்புக்கு அளித்த வாக்குறுதிப்படிஅந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் திருத்தம்: மத்திய அரசு

உலக வா்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ.) அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், இந்தியாவுடன் எல்லையை பகிா்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு, மத்திய தொழில்-வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் இருந்து வரும் நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியதை கட்டாயமாக்கி கடந்த ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

உலக வா்த்தக அமைப்பின் வா்த்தக சேவைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெற்றது. அதில், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் இந்தியா திருத்தம் மேற்கொண்டது குறித்து சீனா ஆட்சேபம் தெரிவித்தது.

ஆனால், உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டும், அந்த அமைப்புக்கு இந்தியா அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலும் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com