ம.பி.யில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 
NDRF team carries out rescue operation after an overcrowded bus plunged into a canal in Sidhi district of Madhya Pradesh.
NDRF team carries out rescue operation after an overcrowded bus plunged into a canal in Sidhi district of Madhya Pradesh.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர். 

சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்துள்ளது. 

முதற்கட்டமாக கரையிலிருந்த 7 பேரை உயிருடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட 30 பேரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத் உறுதிப்படுத்தியுள்ளார். 

பன்சாகர் அணையிலிருந்து வெளிவரும் பிரதான கால்வாயில், சுமார் 30 அடி ஆழத்திலும் இருக்கும் ஷரதா கால்வாயில் பேருந்து விழுந்துள்ளது. எனவே, நீரில் பேருந்து முழுவதுமாக மூழ்கியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ திவாரி கூறியுள்ளார். 

மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக கிரேன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com