மாணவி பலாத்காரம்: பள்ளி தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை

பிகார் மாநிலத்தில், ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மாணவி பலாத்காரம்: பள்ளி தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை
மாணவி பலாத்காரம்: பள்ளி தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை


பாட்னா: பிகார் மாநிலத்தில், ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவதேஷ் குமார் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.

புல்வாரி ஷரீஃப் பகுதியில் இயங்கி வந்த பள்ளியில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவ்ததில், மற்றொரு குற்றவாளியான, ஆசிரியராக இருந்த அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம், பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால், 11 வயது சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் மருத்துவர்களும் பெற்றோரும் விசாரித்ததில், பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com