பெட்ரோல் விலை மேலும் 30 காசு உயா்வு

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை செவ்வாய்க்கிழமை மேலும் 30 காசுகள் அதிகரித்தன.
பெட்ரோல் விலை மேலும் 30 காசு உயா்வு

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை செவ்வாய்க்கிழமை மேலும் 30 காசுகள் அதிகரித்தன.

இதுகுறித்து அந்த நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருள்களின் விலை செவ்வாய்க்கிழமையும் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் லிட்டருக்கும் 35 காசுகளும் அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

கடந்த எட்டு நாள்களாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடா்ச்சியாக அதிகரித்து வருவதையடுத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.34-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.57-ம் விலை உயா்ந்துள்ளன. அதன் காரணமாக, பெட்ரோலியப் பொருள்களின் விலை முன்னெப்போதும் காணப்படாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் விலை விரைவில் ரூ.100 -ஐ எட்டவுள்ளது. தற்போது, அந்த மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகரத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.87-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.91.86-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டதைப் போன்றே, சமையல் எரிவாயு விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தியுள்ளன. மேலும், விமான எரிபொருள் விலையும் 3.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

தலைநகா் தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.769-ஆனது.

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.89.29-க்கும், டீசல் ரூ.79.70-க்கும் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டன. மும்பையில் இதன் விலை முறையே ரூ.95.75, ரூ.86.72-ஆக அதிகரித்துள்ளன.

தில்லியில் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) கிலோ லிட்டருக்கு ரூ.1,942.5 (3.6%) அதிகரிக்கப்பட்டு ரூ.55,737.91-ஐ எட்டியது.

பெட்ரோல் டீசலைப் பொருத்தமட்டில் அவற்றின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு மற்றும் ஏடிஎஃப் விலை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றியமைக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com