உ.பி.: வயல்வெளியில் செத்துக் கிடந்த இரு சிறுமிகள்; ஒரு சிறுமி கவலைக்கிடம்
உ.பி.: வயல்வெளியில் செத்துக் கிடந்த இரு சிறுமிகள்; ஒரு சிறுமி கவலைக்கிடம்

உ.பி.: வயல்வெளியில் இறந்து கிடந்த இரு சிறுமிகள்; ஒரு சிறுமி கவலைக்கிடம்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில், கைகள் கட்டப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகள் மயக்கநிலையில் மீட்கப்பட்டனர்.


உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில், கைகள் கட்டப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகள் மயக்கநிலையில் மீட்கப்பட்டனர்.

இதில் 13 வயது மற்றும் 15 வயமுடைய இரண்டு சிறுமிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் உயிரிழந்துவிட்டனர். 17 வயது சிறுமி கவலைக்கிடமான நிலையில் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி கூறுகையில், பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்க இந்த மூன்று சிறுமிகளும் சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், அவர்கள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரைதள்ளிய நிலையில், அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்களும் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமிகளின் உடலில் எந்தக் காயமும் இல்லை. இது குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமிகளின் உடற்கூராய்வுக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளார்.

மூன்று சிறுமிகளில் இரண்டு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனப்தும், ஒருவர் சிறுமிகளின் தோழி என்பதும், இவர்கள் நேற்று மாலை 3 மணிக்கு வயல்வெளியிலிருந்து கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வர சென்றதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், வயல்வெளிப் பகுதியில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுமிகள் வாயில் நுரைதள்ள கண்டெடுக்கப்பட்டனர். உடனடியாக அவ்விடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவில் துறையினரும் ஆய்வில் ஈடுபட்டு தடயங்களை சேகரித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com