உன்னாவில் 2 சிறுமிகள் மர்ம மரணம்: விசாரணைக்கு 6 குழுக்கள் அமைப்பு

உன்னாவில் 2 தலித் சிறுமிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
உன்னாவில் 2 சிறுமிகள் மர்ம மரணம்: விசாரணைக்கு 6 குழுக்கள் அமைப்பு

உன்னாவில் 2 தலித் சிறுமிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாபுகரா கிராமத்தைச் சோ்ந்த மூன்று தலித் சிறுமிகள் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கிராமத்தினா் பல்வேறு இடங்களில் அந்த சிறுமிகளை தேடியுள்ளனா்.
இறுதியில், கை கால்கள் கட்டப்பட்டு வயல்வெளியில் மயங்கிக் கிடந்த அந்த மூன்று சிறுமிகளையும் புதன்கிழமை மாலை கண்டறிந்த கிராமத்தினா் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனா். 
அந்த மூன்று சிறுமிகளும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அதில் இரண்டு போ் இறந்து விட்டதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு சிறுமியை மேல் சிகிச்சைக்காக கான்பூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவா் விஷம் அருந்தியிருக்கலாம் என மருத்துவா்கள் சந்தேகிக்கின்றனா். உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மூன்று போ் அடங்கிய மருத்துவா் குழு வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்துள்ளது. 
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பார் எனவும் லக்னௌ காவல்துறை தலைவர் லட்சுமி சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் எங்கள் விசாரணை சரியான வழியில் செல்கிறது, விரைவில் ஒரு முன்னேற்றம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com