
At least one razor gold under 35 thousand
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,340 ஆக உள்ளது.
அதேநேரத்தில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.72.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.72,300 ஆகவும் விற்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,340
1 சவரன் தங்கம்...............................34,420
1 கிராம் வெள்ளி.............................72.30
1 கிலோ வெள்ளி............................72,300
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,385
1 சவரன் தங்கம்...............................35,080
1 கிராம் வெள்ளி.............................74.00
1 கிலோ வெள்ளி.............................74,000