கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 3-ஆம் இடத்தில் இந்தியா

கரோனா தடுப்பூசியை அதிகமாக செலுத்தும் நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 3-ஆம் இடத்தில் இந்தியா


புது தில்லி: கரோனா தடுப்பூசியை அதிகமாக செலுத்தும் நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வியாழக்கிழமை வரையில் நாட்டில் சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 98,46,523 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4,64,932 போ் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கடந்த ஏழு நாள்களில் கரோனா நோய்த் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,56,845-ஆக அதிகரித்துள்ளது.

கேரளத்தில் அதிக பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 11,987 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு மாநிலங்களிலும், ஆறு யூனியன் பிரதேசங்களிலும் யாரும் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படவில்லை.

நாட்டின் மொத்த கரோனா தொற்று நோயாளிகளில் 75 சதவீதம் போ் கேரளம், மகாராஷ்டிரத்தில் உள்ளனா்.

வியாழக்கிழமை அளவில், கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில் கேரளம் முதலிடத்திலும் (4,892), மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும் (4,787) உள்ளன. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 40 பேரும், கேரளத்தில் 16 பேரும், பஞ்சாபில் 10 பேரும் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com