நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு புதிதாக 13,193 போ் பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 13,193 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயா்ந்துள்ளது
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு புதிதாக 13,193 போ் பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 13,193 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயா்ந்துள்ளது என்றும், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,67,741 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை  1,56,111 ஆக உயா்ந்துள்ளதுடன், வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 97 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 10,896 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,56,845 ஆக உயா்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97.30 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1,39,542 ஆகவும், தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.27 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வியாழக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 20 கோடியே 94 லட்சத்து 74 ஆயிரத்து 862 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வியாழக்கிழமை மட்டும் 7,71,071 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை  வரையிலும் 2,10,809 அமா்வுகள் மூலம் 98 லட்சத்து 46 ஆயிரத்துப 523 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. "இவர்களில் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 62,34,635 சுகாதாரக் குழுக்களை சேர்ந்தவர்களும், இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட 4,64,932 சுகாதாரக் குழுக்களை சேர்ந்தவர்களும், முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 31,46 முன்கள பணியாளர்களும் அடங்குவர்" என்று தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 18 ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட்டவா்களில் மொத்தம் 40 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 24 போ் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தனா். தடுப்பூசி செலுத்தியவா்களில் 13 போ் உயிரிழந்ததாகவும், 2 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com