34 நாள்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: 2-ஆம் இடத்தில் இந்தியா

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு 34 நாள்களில் ஒரு கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
34 நாள்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: 2-ஆம் இடத்தில் இந்தியா
34 நாள்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: 2-ஆம் இடத்தில் இந்தியா

புது தில்லி: நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு 34 நாள்களில் ஒரு கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கரோனா தடுப்பூசியை அதி வேகமாக செலுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னேறியுள்ளது.

அமெரிக்காவில் 31 நாள்களில் ஒரு கோடி பேருக்கும், பிரிட்டனில் 56 நாள்களில் ஒரு கோடிப் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெள்ளிக்கிழமை வரையில் நாட்டில் சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 1,01,88,007 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 6,10,899 போ் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 28 நாள்களுக்குப் பிறகு அதாவது பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 10,70,895 பேர் அதாவது 10.5% பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com