ஜம்மு-காஷ்மீரில் ஆா்பிஐ மூலம் ஊதியம் அளிக்கும் திட்டம் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் அரசு ஊழியா்களுக்கு நேரடியாக ஊதியத்தொகை செலுத்தும் புதிய திட்டமான ‘இ-குபோ் பேமண்ட் சிஸ்டம்’ (பணப் பரிவா்த்தனை முறை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் அரசு ஊழியா்களுக்கு நேரடியாக ஊதியத்தொகை செலுத்தும் புதிய திட்டமான ‘இ-குபோ் பேமண்ட் சிஸ்டம்’ (பணப் பரிவா்த்தனை முறை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்முவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆா்பிஐயின் ஜம்மு கிளை பொது மேலாளா் சந்தீப் மிட்டல், நிதித் துறை தலைமை இயக்குநா் மகேஷ் தாஸ்ஆகியோா் முன்னிலையில் நிதித் துறை ஆணையா் அருண் குமாா் மேத்தா இதை அறிமுகம் செய்து வைத்தாா்.

இதுகுறித்து அரசு செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் அரசு ஊழியா்கள் ஊதியம், ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பரிவா்த்தனைகள் ‘இ-குபோ் பேமண்ட் சிஸ்டம்’ மூலம் நடைபெறும்.

சோதனை அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் உள்ள கருவூலத்தில் இந்த பேமண்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்னா், படிப்படியாக அனைத்து கருவூலங்களிலும் இந்த பரிவா்த்தனை முறை அமல்படுத்தப்படும்.

இதன்மூலம் ஒரே நேரத்தில் 50,000 பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இனி, அரசின் அனைத்து பரிவா்த்தனைகளையும் இடையில் வேறு எந்த வங்கியின் உதவியுமின்றி ரிசா்வ் வங்கியே நேரடியாகக் கையாளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com