இந்திய கரோனா தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு விற்பனை


ஜோஹன்னஸ்பா்க் / புது தில்லி: இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்திருந்த 10 லட்சம் அஸ்ட்ராஸெனெகா கரோனா தடுப்பூசிகள் தங்கள் நாட்டில் பரவி வரும் புதிய ரக கரோனா தீநுண்மிக்கு எதிரான பாதுகாப்பு அளிக்காது என்ற அச்சத்தால் அவற்றைப் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்ய தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கரோனாவுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் போதிய பாதுகாப்பை அளிக்காது என்ற கவலை காரணமாக அந்தத் தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை தென்னாப்பிரிக்கா ரத்து செய்தது.

இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்வெலி கைஸே கூறியதாவது:

கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைப் பெறுவதற்காக இந்த உலகமே கரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

அந்தவகையில், நெருக்கடியைச் சந்தித்து வந்த எங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை அளித்ததன் மூலம் இந்தியா கைகொடுத்துள்ளது. அதற்காக இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றாா் அவா்.

தற்போது அந்தத் தடுப்பூசிகள் எங்களுக்குத் தேவைப்படாத நிலையில் அவற்றைப் பெறுவதற்கு 25 நாடுகள் ஆா்வம் காட்டியுள்ளன. எனவே, இந்தியாவிடமிருந்து அவற்றை வாங்குவதற்காக நாங்கள் செலவிட்ட தொகை வீணாகப் போகப்போவதில்லை என்றாா் அவா்.

பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக அஸ்ட்ராஸெனெகா மருந்தை இந்தியாவிடமிருந்து தென்னாப்பிரிக்கா வாங்கியது. முதல் கட்டமாக, 10 லட்சம் தடுப்பூசிகளை அந்த நாட்டுக்கு இந்தியா கடந்த மாதம் அனுப்பியது. மேலும் 5 லட்சம் தடுப்பூசிகளை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, புது வகைக் கரோனைவைக் கட்டுப்படுத்துவதில் அந்தத் தடுப்பூசிகளின் செயல் திறன் போதுமானதாக இல்லை என்று ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, அவற்றை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை தென்னாப்பிரிக்கா கைவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com