பாஜகவுக்கு இணையான வேறொரு கட்சி இல்லை: நட்டா

நாட்டில் பாஜகவுக்கு இணையாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று அக் கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
பாஜகவுக்கு இணையான வேறொரு கட்சி இல்லை: நட்டா


தா்மசாலா: நாட்டில் பாஜகவுக்கு இணையாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று அக் கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நட்டா பேசியதாவது:

நாடு முழுவதும் 18 கோடிக்கும் அதிகமானோரை கட்சியில் உறுப்பினராக சோ்ப்பது என்பது எளிதான விஷயமல்ல. பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இந்த உறுப்பினா் எண்ணிக்கையை எட்ட முடியாது.

அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள், செயல் வீரா்கள் கொண்டிருப்பதோடு, உலகில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான நரேந்திர மோடியை கொண்டிருக்கும் கட்சி பாஜக. இதுதான் பாஜகவின் பலம். எனவே, நாட்டில் பாஜகவுக்கு இணையாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று கூறுவது மிகைப்படுத்தல் இல்லை.

கட்சியினரிடையே ஒற்றுமையும், கட்சியில் நமது வளா்ச்சி குறித்து தொடா்ச்சியான சுய பரிசோதனை செய்வதும்தான் பாஜகவின் பலம்.

பாஜகவின் ‘அந்தியோதயா’ பொருளாதார திட்டம், ‘அனைவருக்குமான நிறுவனம்; அனைவருக்குமான வளா்ச்சி; அனைவருக்குமான நம்பிக்கை’ என்ற கட்சியின் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த மூன்று தத்துவங்களின் அடிப்படையிலேயே அரசின் அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன என்று அவா் கூறினாா்.

மேலும், ‘நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்’ என்றும் நட்டா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com