உத்தரகண்ட் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 62-ஆக உயர்வு
உத்தரகண்ட் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 62-ஆக உயர்வு

உத்தரகண்ட் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 62-ஆக உயர்வு

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் ஒரு உடல் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்வளின் எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.    

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் ஒரு உடல் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்வளின் எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.    

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்குள்ள தெளலி கங்கா, ரிஷிகங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலைய திட்டப் பணிகளும், ரிஷிகங்கா நீா்மின் நிலைய திட்டப் பணிகளும் பலத்த சேதமடைந்தன.

அந்தத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீா் புகுந்ததால், அவற்றில் பணிபுரிந்து வந்த 150க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலா் சுரங்கங்களுக்குள் சிக்கிக் கொண்டனா்.

ராணுவ வீரா்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோர் தொடர்ந்து 11வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் சுரங்கப் பகுதியிலிருந்து இன்று மேலும் ஒரு உடல்  மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, பேரிடரால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள்நடைபெற்று வருவதாக உத்தரகண்ட் காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com