
அதிகரிக்கும் கரோனா: மகாராஷ்டிரத்தில் மீண்டும் ஊரடங்கு
மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமராவதி மாவட்டத்தில், வார இறுதி நாள்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மாவட்ட ஆட்சியர் ஷைலேஷ் நாவல் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமராவதி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நேரத்தில், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமராவதி மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யவத்மால் மாவட்டத்திலும் கரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அல்லாமல், கரோனா தடுப்பு விதிமுறைகள் மட்டும் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எம்.டி. சிங் கூறியுள்ளார்.
மமகாராஷ்டிரத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் கரோனா அலை எழக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அமராவதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுளள்து.