இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.09 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 13,993 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக உயா்ந்துள்ளது
இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.09 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 13,993 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக உயா்ந்துள்ளது என்றும், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,78,048 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை  1,56,212 ஆக உயா்ந்துள்ளதுடன், சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 101 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 10,307 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,78,048 ஆக உயா்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97.27 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1,43,127 ஆகவும், தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.30 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வெள்ளிக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 02 லட்சத்து 61 ஆயிரத்து 480 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மட்டும் 7,86,618 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,07,15,204

வெள்ளிக்கிழமை மாலை  வரையிலும் 1 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்துப 204 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com