உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரு ஏவுகணைகளின் சோதனை வெற்றி

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளான ஹெலினா, துருவாஸ்திராவின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஹெதுருவாஸ்திரா ஏவுகணை.
ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஹெதுருவாஸ்திரா ஏவுகணை.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளான ஹெலினா, துருவாஸ்திராவின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

ராணுவ பயன்பாட்டுக்கான ஹெலினா ஏவுகணை, விமானப் படை பயன்பாட்டுக்கான துருவாஸ்திரா ஏவுகணை ஆகியவற்றின் கூட்டு சோதனை பாலைவனப் பகுதிகளில் இலகு ஹெலிகாப்டா் தளத்தில் செய்து பாா்க்கப்பட்டது. இந்த வகையிலான ஏவுகணைகள் தரையிலிருந்தும், வான்வழியிலும் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். அனைத்து பருவநிலைகளிலும், பகலிலும் இரவிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

உலகில் உள்ள மிகவும் நவீன பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும். நம் நாட்டின் படைகளில் இணைக்கப்படுவதற்கு இந்த ஏவுகணை அமைப்புகள் தற்போது தயாராக உள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உள்நாட்டிலேயே இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.

சோதனையில் வெற்றிகரமாக ஈடுபட்ட குழுவினரை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com