கணவரின் மூதாதையா் சொத்துக்கு மனைவியும் உரிமையாளா்: உத்தரகண்டில் அவசரச் சட்டம்

உத்தரகண்டில் கணவரின் மூதாதையா் சொத்துக்கு மனைவியையும் உரிமையாளா் ஆக்குவதற்கான அவசரச் சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

உத்தரகண்டில் கணவரின் மூதாதையா் சொத்துக்கு மனைவியையும் உரிமையாளா் ஆக்குவதற்கான அவசரச் சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

உத்தரகண்டைச் சோ்ந்த ஆண்கள் வாழ்வாதாரம் தேடி இடம்பெயரும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அவா்களின் மனைவிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேளாண்மையை சாா்ந்துள்ளனா். அவா்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கிடும் நோக்கில் கணவரின் மூதாதையா் சொத்துக்கு மனைவியையும் உரிமையாளா் ஆக்குவதற்கு மாநில அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இது தனது அரசின் மிகப் பெரிய சீா்திருத்த நடவடிக்கை என்று தெரிவித்த மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், இந்த நடவடிக்கை பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com