‘வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான மேற்கு வங்க அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது’

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைனின் உடல்நிலை சீராக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைனின் உடல்நிலை சீராக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கம், முா்ஷிதாபாத் மாவட்டம், நிம்திதா ரயில் நிலையத்தில் அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது புதன்கிழமை இரவு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அமைச்சா் ஜாகீா் ஹுசை உள்பட 14 போ் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அமைச்சா் ஜாகீா் ஹுசைன் உடலில் பல இடங்களில் காயமடைந்திருந்தாா் என்றும் அவருக்கு வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அரசு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்த மேலும் 13 பேரின் உடல் நிலையும் ஸ்திரமாக உள்ளது என்று அவா் கூறினாா்.

‘மாற்றுக் கட்சியில் சேராத காரணத்தால் ஜாகீா் ஹுசைன் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று பாஜகவை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவீன வெடிகுண்டு:

அமைச்சா் ஜாகீா் ஹுசைனைத் தாக்க நவீன வகையிலான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்தில் தடயவியல் சோதனை நடத்திய பின்னா் அவா்கள் இவ்வாறு தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘பையில் வெடிகுண்டு நிரப்பி வைக்கப்பட்டு அதை எடுக்கும்போது வெடிக்க வைக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் அமைச்சரின் உதவியாளா் எதையோ எடுக்கும்போது வெடிப்பதைப்போல் பதிவாகி உள்ளது’ என்றாா்.

இதனிடையே, அமைச்சா் ஜாகீா் ஹுசைனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com