உன்னாவ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் ஆசாத் கான்பூரில் தடுத்து நிறுத்தம்

​உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் பார்ப்பதற்காகச் சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் திங்கள்கிழமை காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
உன்னாவ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் ஆசாத் கான்பூரில் தடுத்து நிறுத்தம்


உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் பார்ப்பதற்காகச் சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் திங்கள்கிழமை காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி பீம் ஆர்மி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்திலுள்ள பாபுகரா கிராமத்தில் கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காக வயலுக்குச் சென்ற  மூன்று தலித் சிறுமிகள் கடந்த புதன்கிழமை கை கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு சிறுமிக்கு கான்பூரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினரைச் சந்தித்த சந்திரசேகர் ஆசாத், ரெஜென்சி மருத்துவனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் மூன்றாவது சிறுமியை நேரில் சந்திக்கச் சென்றார். அப்போது காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் சிகிச்சை பெற்று வரும் மூன்றாவது சிறுமியை மேம்பட்ட சிகிச்சைக்காக அரசு தில்லிக்கு அனுப்பாவிட்டால் உன்னாவ் செல்வதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com