மக்கள் குறைகளைத் தீர்க்க 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய மத்தியப் பிரதேச அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலம் அஷோக்நகர் மாவட்டம் சுரெல் கிராமத்தில், மக்கள் குறைகளைக் கேட்கச் சென்ற அமைச்சர், அது தொடர்பான அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வசதியாக 
மக்கள் குறைகளைத் தீர்க்க 50 அடி ராட்டினத்தில் ஏறிய மத்தியப் பிரதேச அமைச்சர் (கோப்பிலிருந்து)
மக்கள் குறைகளைத் தீர்க்க 50 அடி ராட்டினத்தில் ஏறிய மத்தியப் பிரதேச அமைச்சர் (கோப்பிலிருந்து)


மத்தியப் பிரதேச மாநிலம் அஷோக்நகர் மாவட்டம் சுரெல் கிராமத்தில், மக்கள் குறைகளைக் கேட்கச் சென்ற அமைச்சர், அது தொடர்பான அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வசதியாக அங்கிருந்த 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் சில கிராமங்கள் இன்னமும் செல்லிடப்பேசி தொடர்பு இல்லாமல் இருப்பதற்கு இந்த செய்தியே உதாரணம்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ், சுரேல் கிராமத்தில் நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். சில நாள்கள் அங்கு தங்கியிருந்த அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவத்து வந்தனர்.

அவர்களது குறைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் அத்துறை அதிகாரிகள் அமைச்சர் அமைச்சர்களை தொடர்பு கொள்ளலாம் என்றால், செல்லிடப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை.

இதனால், அங்கிருக்கும் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி, அங்கிருந்து செல்லிடப்பேசி மூலம் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் குறைகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com