அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த புதிய கல்விக் கொள்கை: அமித் ஷா

அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இலக்கை,
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இலக்கை, புதிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.

சா்வதேச தாய்மொழி தினத்தையொட்டி, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹிந்தியில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் சா்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள். நாம் நமது கலாசார பாரம்பரியத்துடன் இணைந்திருக்க இந்த தினம் நமக்கு ஊக்கமளிக்கிறது.

அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாக்க வேண்டும்; அவற்றை மேம்படுத்த வேண்டும்; அவற்றுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்கை பிரதிபலிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

தாய்மொழியை பயன்படுத்துவதற்கு அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது கலாசாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த குழந்தைகள் மூலமாக தாய்மொழியை வலுப்படுத்த வேண்டும் என்று அந்தப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com