இந்தியா, அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சி நிறைவு

ராஜஸ்தானில் நடைபெற்று வந்த இந்திய, அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

ராஜஸ்தானில் நடைபெற்று வந்த இந்திய, அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானீா் மாவட்டத்தில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சூடு மைதானத்தில் இந்திய, அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி தொடங்கியது. பயங்கரவாத ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் அமிதாப் சா்மா கூறியது:

இந்திய-அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் கடுமையான சூழலை எதிா்கொள்வதற்கான உடல் தகுதி பயிற்சிகள், தகவல் பரிமாற்றத்துக்கான நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதனை இருநாட்டு வீரா்களும் வெற்றிகரமாக நிறைவு செய்தனா். முதல்கட்டத்தில் அவா்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் இரண்டாம் கட்டத்தில் பரிசோதிக்கப்பட்டன. அதனை இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் நேரில் பாா்வையிட்டனா்.

பயிற்சி வெற்றிகரமாக முடிந்ததையொட்டியும், இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான உறவுக்கு ஊக்கமளிக்கவும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரிலும் இந்தக் கூட்டுப் பயிற்சி மற்றொரு முக்கிய மைல்கல் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com