குஜராத் மாநகராட்சித் தேர்தல்: பாஜக வெற்றி, காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவு

குஜராத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தொண்டர்களுடன் வெற்றியைக் கொண்டாடும் வெற்றி வேட்பாளர்கள்
தொண்டர்களுடன் வெற்றியைக் கொண்டாடும் வெற்றி வேட்பாளர்கள்


குஜராத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள 6 மாநகராட்சிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சராசரியாக 46.08 சதவிகித வாக்குகள் பதிவானதாக அந்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பாஜக அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் பாஜவுக்குக் கடும் போட்டியாக இருந்த காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று நகர்ப்புறங்களில் காங்கிரஸுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சூரத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வதோதாராவில் மொத்தமுள்ள 76 இடங்களில் பாஜக 66 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்கள் காங்கிரஸிடம் சென்றுள்ளது.

ராஜ்கோட்டில் மொத்தமுள்ள 72 இடங்களில் 68 இடங்களில் பாஜக வென்றுள்ளது. மீதமுள்ள 4 இடங்களில் காங்கிரஸில் வென்றுள்ளது.

ஜாம்நகரில் மொத்தம் 64 இடங்கள். இதில் பாஜக 50 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி குஜராத்தில் தனது கணக்கைத் தொடங்கி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாவ்நகரில் மொத்தம் 52 இடங்கள் உள்ளன. அதில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றுள்ளன.

இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அர்ஜுன் மோத்வாதியா தொலைபேசி வாயிலாக ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் கூறியது:

"குஜராத்தில் 6 மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸை மனமுடையச் செய்துள்ளது. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு இருள் சூழ்ந்த இரவுக்குப் பிறகு ஒரு விடியல் இருக்கும். நகர்ப்புற வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைப்போம்."

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ராஜ்கோட் காங்ககிரஸ் தலைவர், சூரத் காங்கிரஸ் தலைவர், பாவ்நகர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

கடந்த பேரவைத் தேர்தலில் சூரத்தில் அனைத்துத் தொகுதிகளையும் பாஜகவே வென்றது. ஆனால், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-இல் நடைபெற்ற மக்களைத் தேர்தலில் குஜராத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com