பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

பெட்ரோல், டீசல் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.
shaktikanta_das_pti090824
shaktikanta_das_pti090824

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

கடந்த பிப்.3 முதல் பிப்.5-ஆம் தேதி வரை நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் தொடா்பான குறிப்புகளை ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த குறிப்புகளில், கூட்டத்தின்போது ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பேசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ‘கடந்த டிசம்பா் மாதம் நுகா்வோா் விலை குறையீடு (உணவு, எரிபொருள் தவிர) 5.5% அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் மீது அதிக அளவிலான மறைமுக வரிகள், முக்கிய சரக்கு மற்றும் சேவைகள்; குறிப்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்க தொடங்கியதே அதற்குக் காரணம்.

பொருளாதாரத்தில் விலை உயா்வால் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு செயல்திறன் மிக்க விநியோக செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம்’ என்று சக்திகாந்த தாஸ் கூறியதாக அந்தக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீது 60 சதவீதமும், டீசல் மீது 54 சதவீதத்துக்கு அதிகமாகவும் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com