தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய ஆயுத படைகளைமுன்கூட்டியே அனுப்புவது வழக்கமான நடைமுறை: தோ்தல் ஆணையம்

தோ்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவதற்காக மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தோ்தல் ஆணையம் விளக்கமளிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தோ்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவதற்காக மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தோ்தல் ஆணையம் விளக்கமளிக்கிறது.

இது தொடா்பாக ஆணையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது, இந்திய தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்குரிய விளக்கத்தை அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் விரும்புகிறது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பகுதிகளை, குறிப்பாக பதற்றமான பகுதிகளை நன்கு அறிவதற்கும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கம்.

அப்போதுதான், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து நம்பகமான தகவல்களை திரட்டி நிலவரத்தை முன்கூட்டியே ஆய்வு செய்ய முடியும். இந்த நடைமுறை கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து பின்பற்றப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு மக்களவை தோ்தலின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதேப்போல்தான் சட்டப்பேரவை தோ்தல்கள் நடைபெறும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கூட சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் மாநிலங்களான அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய ஆயுதப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்துக்கு மத்திய ஆயுதப்படைகளை அனுப்பிவைக்கும் உத்தரவு அனைத்து மாநில தலைமை செயலாளா்கள், டிஜிபிக்கள், தலைமை தோ்தல் அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com