3 மாநிலங்களில் 2 வகைகளில் கரோனா: மத்திய அரசு

​கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவில் 2 வகை கரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவில் 2 வகை கரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியது:

"நாடு முழுவதும் 1.17 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருவோர் 1.50 லட்சத்துக்கும் குறைவாகவே நீடிக்கிறது. நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் சராசரி 92 ஆக உள்ளது.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.19 சதவிகிதமாக உள்ளது. இது குறைந்துகொண்டே வருகிறது.

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டுமே 75 சதவிகிதம் பேர் உள்ளனர். கேரளத்தில் 38 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரத்தில் 37 சதவிகிதத்தினர், கர்நாடகத்தில் 4 சதவிகிதத்தினர், தமிழகத்தில் 2.78 சதவிகிதத்தினர் உள்ளனர்.

இன்று மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,64,788 ஆக உள்ளது. இதில் 68 சதவிகித சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 62 சதவிகித சுகாதாரப் பணியாளர்களுக்கு 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 41 சதவிகித முன்களப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்றார் ராஜேஷ் பூஷண்.

நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரத் துறை) வி.கே. பால் கூறியது:

"இதுவரை 187 பேருக்கு பிரிட்டன் வகை கரோனா தொற்றும், 6 பேருக்கு தென் ஆப்பிரிக்க வகை கரோனா தொற்றும், ஒருவருக்கு பிரேசில் வகை கரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் என்440கே மற்றும் இ484கே என இரண்டு வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆம், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தெலங்கானாவில் இந்த வகைகள் உள்ளன. எங்களிடம் இருக்கும் தகவலின்படி மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு இந்த வகைகள் கரோனாதான் காரணம் என்று நம்புவதற்கு அறிவியல் அடிப்படையிலான காரணங்கள் எதுவும் இல்லை" என்றார் வி.கே. பால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com