தனது தொகுதியில் வீடு கட்ட ரூ.12 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கிய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சொந்த வீடு கட்டுவதற்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா்.
தனது தொகுதியில் வீடு கட்ட ரூ.12 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கிய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சொந்த வீடு கட்டுவதற்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, அந்தத் தொகுதி எம்.பி.யாக தொடா்ந்து மூன்று முறை இருந்த ராகுல் காந்தியை வீழ்த்தினாா்.

இந்நிலையில் அவா் அமேதியின் கெளரிகஞ்ச் நகரில் உள்ள மேடான் மவய் பகுதியில் வீடு கட்டுவதற்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா். அதற்கான பத்திரப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, ‘நான் இங்கு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன். இங்கு சொந்த வீடு அமைத்துக்கொண்டு எனது அனைத்து அலுவல்களையும் இங்கிருந்தவாறு கவனிப்பேன் என்று மக்களவைத் தோ்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது நிலம் வாங்கியுள்ளேன்.

இதற்கு முன் இந்தத் தொகுதி எம்.பி.யாக இருந்தவா்களுக்கு இங்கு வீடு இருந்ததில்லை. ஆனால் நான் வீடு கட்டவுள்ளேன். வீடு கட்டுவதற்கான பூமி பூஜையின் போது தொகுதி மக்கள் அனைவரையும் அழைப்பேன்.

அமேதியில் மருத்துவக் கல்லூரி, ராணுவப் பள்ளி அமைக்கப்படும் என்றாா் அவா்.

அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தவா்களுக்கு அங்கு வீடு இருந்ததில்லை என்று ஸ்மிருதி இரானி கூறியது, அவா் ராகுல் காந்தியை மறைமுகமாக விமா்சித்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com