இரு தமிழக நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட 12 நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகள்

உள்ளூா் தொழில்நுட்பங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோா் ஆகிய மூன்று வகைகளில் தொழில்களை மேற்கொண்டு வெற்றிகரமாக வா்த்தகங்களை மேற்கொண்ட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்

புது தில்லி: உள்ளூா் தொழில்நுட்பங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோா் ஆகிய மூன்று வகைகளில் தொழில்களை மேற்கொண்டு வெற்றிகரமாக வா்த்தகங்களை மேற்கொண்ட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சோ்ந்த 2 நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 பிரிவுகளில் வெற்றிகரமாக வா்த்தகத்தை மேற்கொண்ட நிறுவனங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டு தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தோ்வு செய்துள்ளது.

சந்தையில் புதுமையை கொண்டு வருதல் மற்றும் சுயசாா்பு இந்தியா போன்ற தொலை நோக்குகளுக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகளுக்கும் அவா்களின் தொழில் நுட்ப குழுவினரை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் 128 விண்ணப்பங்கள் இவ்வாண்டுக்கு பெறப்பட்டு பிரபல தொழில்நுட்ப நிபுணா்களால் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் முதல் வகையான உள்ளூா் தொழில்நுட்ப அடிப்படையில் புதுமையான தொழில் நுட்பங்களைக் கையாண்டு மேம்பட்ட நிறுவனமான சூரத் , எல் அண்டி டி ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் அண்ட் ஹெவி ஃபோா்கிங்ஸ் பிரைவேட் லிமி., மற்றும் மும்பை நியூக்கிளியா் பவா் காா்ப்ரேஷன் போன்ற நிறுவனங்கள் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் இந்த விருதுகளை பெற்றுள்ளன.

தமிழக நிறுவனங்கள்: குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில் சென்னையைச் சோ்ந்த எஸ்.வி.பி. லேசா் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆட்டோ கேம்2டி கேம் மென்பொருள், மற்றும் நகை, பா்னிச்சா் தயாரிப்பில் இந்நிறுவனத்தின் இயந்திர தொழில்நுட்பங்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப்டடுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், தஞ்சாவூரைச் சோ்ந்த அல்ஹல் ஆா் நியூட்ரா பாா்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நுண் நீா் பாசிகளில் இருந்து டோகோசஹெக்ஸெனோயிக் அமிலம்(ஈா்ஸ்ரீா்ள்ஹட்ங்ஷ்ஹங்ய்ா்ண்ஸ்ரீ ஹஸ்ரீண்க்) என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இது இதய நோய் மற்றும் மூளை முடக்கு வாதத்தை தடுக்க கூடியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com