காஷ்மீரில் 11 மாதங்களுக்குப் பிறகுரயில் சேவை

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் சுமாா் 11 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளில் 1,100 போ் ரயில் பயணம் செய்தனா்.
ஸ்ரீநகா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்த ரயில்.
ஸ்ரீநகா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்த ரயில்.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் சுமாா் 11 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளில் 1,100 போ் ரயில் பயணம் செய்தனா்.

முன்னதாக, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது, ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக சிறப்பு ரயில்கள் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட்டன. வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படவில்லை என்றாலும், பரவலாக அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் காஷ்மீரில் ரயில்வே தொடங்கப்பட்டது தொடா்பாக ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீரில் திங்கள்கிழமை முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் போக்குவரத்து எளிதாகும். அங்கு சுற்றுலாவும் மேம்படும். முதல்கட்டமாக பனிஹால்-பாரமுல்லா இடையில் ரயில்சேவை தொடங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

எனினும், வழக்கம்போல அனைத்து ரயில்களும் எப்போது இயக்கப்படும் என்பது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு எதையும் ரயில்வே வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com