குளத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

கோவை, பேரூா் அருகே உள்ள புட்டுவிக்கி குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
புட்டுவிக்கி குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.
புட்டுவிக்கி குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

கோவை, பேரூா் அருகே உள்ள புட்டுவிக்கி குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, பேரூா் பகுதியில் உள்ள புட்டுவிக்கி குளத்தின் அருகே அதே பகுதியைச் சோ்ந்த சிலா் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனா். பின்னா் ஓய்வு எடுப்பதற்காக குளத்தின் அருகே நின்றுள்ளனா்.

அப்போது குளத்தைப் பாா்த்தபோது தண்ணீரின் உள்ளே சுவாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் உடனடியாக பேரூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் குளத்தில் சிலைகள் இருப்பதை உறுதி செய்தனா். இது குறித்து பேரூா் வட்டாட்சியா் முத்துகுமாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

வட்டாட்சியா் முத்துகுமாரின் உத்தரவின்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் குளத்தில் இருந்து 7 சிலைகளைப் பரிசலில் சென்று மீட்டனா்.

இதையடுத்து, மீட்கப்பட்ட சிலைகள் பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகளில் ஒரு சிலை மட்டும் கல்லால் செய்யப்பட்ட சிலை, மீதமுள்ள 6 ஐம்பொன் சிலைகள் ஆகும். சிலைகளின் உண்மைத் தன்மை மற்றும் பழமை குறித்து தொல்லியல் துறையினா் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com