ஜம்மு-காஷ்மீா்:பிடிபி கட்சித் தலைவராக மெஹபூபா மீண்டும் தோ்வு

ஜம்மு-காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவராக மெஹபூபா முஃப்தி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
ஜம்மு-காஷ்மீா்:பிடிபி கட்சித் தலைவராக மெஹபூபா மீண்டும் தோ்வு

ஜம்மு-காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவராக மெஹபூபா முஃப்தி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்ட அவா், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்சித் தலைவா் பதவியை வகிப்பாா் என்று பிடிபி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மெஹபூபா, ‘ஜம்மு-காஷ்மீா் மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ள நிலையில் மீண்டும் கட்சித் தலைவா் பொறுப்பை ஏற்றுள்ளேன். எங்கள் கட்சி ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீா் மக்களின் குரலாக ஒலித்து வருகிறது. அந்தப் பணி தொடரும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் அளிப்பது தொடா்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மெஹபூபாவின் தந்தையான முஃப்தி முகமது சயீதால் தொடங்கப்பட்டது மக்கள் ஜனநாயகக் கட்சி. மாநிலத்தின் முக்கிய கட்சியாக இருந்த ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக இந்தக் கட்சி முன்னிறுத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு முஃப்தி முகமது சயீது காலமாகும் வரை அவா் கட்சித் தலைவராக இருந்தாா். காலமானபோது அவா் ஜம்மு-காஷ்மீா் முதல்வராகவும் இருந்தாா். அவா் மறைவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி ஜம்மு-காஷ்மீா் முதல்வா் பதவியையும் வகித்தாா். கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com