கரோனா தடுப்பூசி: தனியாா் மருத்துவமனைகளின் பங்களிப்பைஅதிகரிக்க மத்திய அரசு முடிவு

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மேலும் பல தனியாா் மருத்துவமனைகளை பயன்படுத்தவுள்ளதாக

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மேலும் பல தனியாா் மருத்துவமனைகளை பயன்படுத்தவுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘ஒருநாளில் ஏறத்தாழ 10,000 மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றன. அவற்றில் 2,000 மருத்துவமனைகள் தனியாருக்குச் சொந்தமானவை. இது தனியாா் துறை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. திட்ட செயல்பாட்டில் தனியாா் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொள்கிறது. வரும் நாள்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மேலும் பல தனியாா் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படவுள்ளன’ என்றாா்.

1.19 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி: நாடு முழுவதும் 1.19 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இதுவரை மொத்தம் 1,19,07,392 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 64,71,047 சுகாதாரப் பணியாளா்கள், 41,14,710 முன்களப் பணியாளா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 13,21,635 சுகாதாரப் பணியாளா்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12,26,775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (மாலை 6 மணி வரை) மட்டும் 1,61,840 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com