பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

இரண்டு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்ட நிலையில், இன்று அவற்றின் விலையானது மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

இரண்டு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்ட நிலையில், இன்று அவற்றின் விலையானது மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருள்களின் விலை தொடா்ச்சியாக 12 நாள்கள் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில் அவற்றின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலை தலா 35 காசுகள் அதிகரிக்கப்பட்டு அவற்றின் விற்பனை விலையானது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது.

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய விலை உயா்வையடுத்து ஒரு லிட்டா் பெட்ரோல் சென்னையில் ரூ.92.90-க்கும் தில்லியில் ரூ.90.93-க்கும், மும்பையில் ரூ.97.34-க்கும் விற்பனை செய்யப்பட்டன . அதேபோன்று நாட்டில் அதிகம் விற்பனையாகும் எரிபொருளான ஒரு லிட்டா் டீசல் விலை சென்னையில் 86.31-ஆகவும் தில்லியில் ரூ.81.32-ஆகவும், மும்பையில் ரூ.88.44-ஆகவும் மாற்றமின்றி இன்று விற்பனையாகிறது.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டா் பெட்ரோல் விற்பனையில் 60 சதவீதமாகவும், டீசல் விற்பனையில் 54 சதவீதமாகவும் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com