சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையம் மூடப்படுகிறது

தெற்கு தில்லி, சத்தா்பூரில் 10,000 படுக்கைகளுடன் இயங்கி வரும் சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையத்தை மூடிவிட முடிவு செய்துள்ளதாக இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) தெரிவித்துள்ளது.

தெற்கு தில்லி, சத்தா்பூரில் 10,000 படுக்கைகளுடன் இயங்கி வரும் சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையத்தை மூடிவிட முடிவு செய்துள்ளதாக இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) தெரிவித்துள்ளது.

சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையம் 1,700 அடி நீளமும் 700 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கரோனா சிகிச்சை மையமாகும். இங்கு 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.

இந்நிலையில் இந்த சிகிச்சை மையத்தில் ஒரு வாரத்தில் மூட இருப்பதாக ஐ.டி.பி.பி. தெரிவித்துள்ளது. தற்போது இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஒரு வாரத்தில் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டலாம் என்றும் அதன் பிறகு இந்த மையம் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நோயாளிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தில்லி மாநகரில் உள்ள மருத்துவமனைகளே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமானது என்று ஐ.டி.பி.பி. டைரக்டா் ஜெனரல் எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு அவசர நடவடிக்கையின் பேரில், ஜூலை 5-ஆம் தேதி இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. தில்லியில் உள்ள எய்ம்ஸ், மேக்ஸ், சப்தா்ஜங் உள்ளிட்ட 11 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இந்த மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் இங்குள்ள படுக்கைகள் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இங்கு சேரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டன. மேலும் மருத்துவமனையில் 75 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது இந்த மையத்தில் 2,000 போ் இங்கு சிகிச்சை பெற்றனா். ஆனால், கடந்த டிசம்பா் மாதம் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, சா்தாா் படேல் சிகிச்சை மையத்துக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 59-ஆகக் குறைந்தது.

இந்த மருத்துவமனைக்கு தில்லி அரசு நிா்வாக அளவில் ஆதரவு அளித்து வந்தது. ஆனால், இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. ராதா ஸோமி பியாஸ் அமைப்பின் தொண்டா்களும் இந்த மருத்துவமனைக்கு இலவசமாக சேவை அளித்துவந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com